கொரோனாவால் லாக்டவுனில் தாய் வீட்டில் சிக்கிக்கொண்ட மனைவி ! கணவன் அதிரடியாக 2 வது திருமணம் !

பீகார் மாநிலத்தில் தாய் வீட்டிற்கு சென்ற தன் மனைவி ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டதால் கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பீகார் மாநிலம் பாலிகஞ்ச் மாவட்டம் பரத்புராவை சேர்ந்த தீரஜ் குமார் என்பவரின் மனைவி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அம்மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தாய் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணால் மீண்டும் கணவனின் வீட்டிற்கு வர முடியவில்லை. இதற்கிடையில் தீரஜ் தனது மனைவிக்கு போன் செய்து, தனது வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். ஆனாலும் ஊரடங்கு உத்தரவினால் தீரஜின் மனைவியால் கணவன் வீட்டிற்கு திரும்ப முடியவில்லை.