வடகொரிய ஜனாதிபதி குறித்து சற்று முன் வெளியான புதிய தகவல் ! வீடியோ இணைப்பு !

வடகொரிய ஜனாதிபதி உயிருடன் இருக்கின்றார்  நலமாகயிருக்கின்றார் என தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய ஜனாதிபதியின் சிரேஸ்ட வெளிவிவகார கொள்கை ஆலோசகர் மூன் சங் இன் இதனை சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

அவர் உயிருடன் உள்ளார் நலமாக உள்ளார், அவர் ஏப்பிரல் 13 ம் திகதி முதல் வொன்சன் பகுதியில் காணப்படுகின்றார்,சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளை காணமுடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடு உறுதியானது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரிய இணைப்பு அமைச்சர் கிம் யினே சுல் வழமைக்கு மாறாக எதுவும் இடம்பெறவில்லை என்பதையே புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

வுகானில் கடைசி நோயாளியும் நேற்று வீடு திரும்பினார் !

சீனாவின் வூகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் கடைசி நோயாளியும் நேற்று வீடு திரும்பினார்.

வூகான் இறைச்சி சந்தை கழிவறையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக ஒரு பெண் மூலம் கொரனோ தொற்று பரவியதாக கூறப்படுகிறது.

தற்போது வூகான் மருத்துவமனையில் கொரோனா நோயாளி என ஒருவர் கூட இல்லை. ஒருகோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட வூகான் நகரம் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி முதல் 76 நாட்களாக ஊரடங்கில் வைக்கப்பட்டிருந்தது.

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 869 பேர் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்நோய்த் தொற்று இருபத்தி ஒன்பது லட்சம் பேருக்கும் மேல் பரவியதில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.