கொரோனாவின் கொடூரம் ..! ஒன்றாக பிறந்து …இறப்பிலும் இணைந்து விடைபெற்ற இரட்டை சகோதரிகள் ! (VIDEO )

ஒன்றாகவே இந்த உலகிற்கு வந்து கொரோனாவால் ஒன்றாகவே விடைபெற்ற சகோதரிகளால், பிரித்தானியா மக்களே ஆடிப்போயுள்ளார்கள் என்று தான் கூறவேண்டும். நாங்கள் ஒன்றாகவே இந்த உலகிற்கு வந்திருக்கின்றோம் அதேபோன்று ஒன்றாகவே தான் போவோம் என கூறிவந்த இரட்டைச் சகோதரிகள் கொரோனாவல் இறந்த விடையம் பிரித்தானிய செய்திகளில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. கடந்த செவ்வாய்யும் இன்று வெள்ளி காலையும் தமது 37ஆவது வயதில் இங்கிலாந்தின் சவுத்தாம்டன் வைத்தியசாலையில் மரணத்தைத் தழுவிக் கொண்டனர் இந்த இணை பிரியா சகோதரிகள்.

சிறு வயதில் இருந்தே பொம்மைகளோடு விளையாடும் போதும், இந்த சகோதரிகள் தம்மை ஒரு நர்ஸ் என்று நினைத்து அந்தப் பொம்மைகளுக்கு உதவிசெய்வது போல விளையாடி வந்தார்கள். வளர்ந்த பின்னர் கூட தாதியாக படித்து, வைத்தியசாலையில் பணியாற்றி வந்தார்கள். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். ஒரு தாதி என்ற நிலையைக் கடந்து இருவரும் தமது பராமரிப்பில் உள்ள நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் விதத்தை பேரன்புடன் நினைவு கூருகின்றனர் இவர்களது சக தாதிகள்.

இருவரும் சவுத்தாம்டன் சிறுவர் வைத்தியசாலையிலேயே பணியாற்றியுள்ளனர். 2013 வரை மட்டுமே பணியாற்றியுள்ளார். இருவரும் உடலநலக்குறைவு கொண்டவர்களாக சமீக காலத்தில் இருந்துள்ளமை கோவிட்19 அதிக தாக்கத்தை அவர்களில் ஏற்ப்படுத்துவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஒன்றாகவே பிறந்து ஒன்றாகவே வசித்து தற்போது ஒன்றாகவே விடைபெற்றுவிட்டனர் இந்த இணைபிரியாக இரட்டையர். இவர்களுடன் பிரித்தானியாவில் கோவிட்19 தாக்கத்திற்கு உள்ளாகி இறந்த தாதிகளின் எண்ணிக்கை 50 எட்டியுள்ளது. இவர்களின் ஆத்மசாந்திக்கு நாமும் பிரார்த்திப்போம்.

பிரித்தானியாவில் தமிழ் மருத்துவரையும் காவு கொண்ட கொரோனா!

பிரித்தானியா மிட்லாண்ட் மருத்துவமனையில் கடமையாற்றி வந்த தமிழ் மருத்துவரான விஷ்ணு ராசையா(வயது-48) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் மருத்துவ ஆலோசகரான விஷ்ணு ராசையா மலேசியாவைக் குடும்ப பின்னணியாக கொண்டவர். இவர் பேர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்.எச்.எஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

விஷ்ணு ராசையா “அன்பான கணவர் மற்றும் தந்தை” எனவும், அவரின் மரணம் எங்களுக்குப் போிழப்பாகும் எனவும் அவரது மனைவி லிசா தெரிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து மீண்டெழுந்து பி.பி.சி இல் செய்தி வாசிக்கும் ஈழத்தமிழர் (Video)

அனைத்துலக பிபிசி செய்திச்சேவையில் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து வரும் ஜோர்ஜ் அழகையா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் தொலைக்காட்சியில் செய்தி வாசித்து வருகிறார்.

கொழும்பில் பிறந்த ஈழத்தமிழரான ஜோர்ஜ் அழகையா நீண்டகாலமாக பிபிசியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு உலகெங்கும் ஏராளம் ரசிகர்கள் உள்ளனர்.

அவர் சில காலத்திற்கு முன்னர் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தார்.புற்றுநோயின் நான்காம் கட்ட ஆபத்தான நிலையிலிருந்த அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஓரளவு குணமடைந்த நிலையில் தொடர்ந்தும் செய்தி வாசித்து வந்தார்.

அண்மையில் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது. ஏற்கனவே புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்றும் ஏற்பட்டிருந்தது. இரண்டு ஆபத்தான நோய்கள் குறித்து வைத்தியர்கள் கவலையடைந்திருந்த நிலையில் 4 வாரப் போராட்டத்தின் பின் ஜோர்ஜ் அழகையா கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

நேற்று முன்தினம் (21) பிபிசியின் மாலை-06 மணி செய்திகளை பழைய மிடுக்குடன் ஜோர்ஜ் அழகையா வாசித்தார்.
அவருக்குப் பிரித்தானியாவிலேயே ஏராளம் ரசிகர்கள் காணப்படும் நிலையில் பிரித்தானியாவின் முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் ஜோர்ஜ் அழகையாவின் மீள்வருகையைப் பாராட்டி செய்தி வெளியிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Total Page Visits: 3060 - Today Page Visits: 1