தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

கொரோனா வைரஸின் கோரப்பிடி உலகச் சமூகத்தை நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது, உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்து 15 லட்சத்து 17 ஆயிரத்து 95 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை 88 ஆயிரத்து 441 பேராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு காலத்தை மேலும் 2 வார காலத்திற்கு நீட்டிக்கக் கோரி முதல்வர் பழனிசாமியிடம் பரிந்துரை செய்திருப்பதாக மருத்துவ வல்லுநர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசனை !

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு நாளை ஊரடங்கு குறித்த முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக 12 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஊரடங்கை தளர்த்தலாமா? என்பது குறித்து பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளனர்.

இந்த வாரம் இறுதியில் (நாளை) அறிக்கை அளிக்கப்படும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

விழுப்புரத்தில் இருந்து தப்பி ஓடிய கொரோனா நோயாளி புகைப்படம் இதோ !

விழுப்புரத்தில் டில்லியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த வாலிபர் திடீரென தப்பி ஓடி உள்ளார்.

அவருடைய புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ளது. மேலே கண்டுள்ள புகைப்படத்தில் உள்ளவரை காண்போர் உடனடியாக அரசுக்குத் தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் அளிக்க வேண்டிய எண் 04146 223265 என்னும் எண்ணாகும்.

Total Page Visits: 960 - Today Page Visits: 1