கொரோனாவை குணப்படுத்த இந்த சிகிச்சையை கொடுங்க ! புது ஐடியா கொடுத்த ட்ரம்ப் ! மருத்துவர்கள் கடும் கண்டனம்!

கொரோனா சிகிச்சைக்கு… புது ஐடியா கொடுத்த ட்ரம்ப்!.. மருத்துவர்கள் கடும் கண்டனம்!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக அமெரிக்காவையே பாதித்துள்ளது. எனவே அமெரிக்காவில் கொரோனாவைத் தடுக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா சிகிச்சையில், கிருமி நாசினியை பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி முயற்சிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே அதிகமான கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும், இதுவரை சுமார் 8 லட்சத்து 79 ஆயிரத்து 529 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸ் அதிகமான வெப்ப நிலை இருக்கும் இடங்களிலும், ஈரப்பதமான சூழலிலும் உயிர் வாழாது என்று ஆய்வுகளின் முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.

சூரியனின் ஊதா கதிர்களை நோய் பாதிக்கப் பட்டவரின் உடலுக்குள் செலுத்தி, அதனை பரிசோதனை செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும்.

மேலும், அந்த வகையில் கிருமி நாசினியைப் பாதிக்கப்பட்டவரின் உடலுக்குள் செலுத்தி, சுத்தம் செய்வதன் மூலம், கொரோனாவை அழிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அந்த ஆராய்ச்சி கூட சுவாரஸ்யமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தக் கூற்று, மருத்துவ நிபுணர்கள் மத்தியில் பயத்தையும், கடும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. புறஊதாக்கதிர்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா சிகிச்சைக்கு… புது ஐடியா கொடுத்த ட்ரம்ப்!.. மருத்துவர்கள் கடும் கண்டனம்!

கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு… அமெரிக்கா கேட்கும் மலைக்க வைக்கும் இழப்பீடு…

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டாலும் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிக அதிகம். இந்த பாதிப்புகளுக்கு இழப்பீடாக 20 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்கக் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு… அமெரிக்கா கேட்கும் மலைக்க வைக்கும் இழப்பீடு…கொரோனா வைரஸ் தொற்றை வேண்டுமென்றே பரப்பி சீனா உலகை ஏமாற்றியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றை வேண்டுமென்றே பரப்பி சீனா உலகை ஏமாற்றியுள்ளது. சீன அரசு இதெற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து, முன்னரே மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள். அவர்களையும் செய்தியாளர்களையும் சீனா ஒன்றுமில்லாமல் ஆக்கியது.

கொரோனா பரவலைத் தடுக்கவும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து உலகுக்கு பொய்யை மட்டுமே சொல்லியது சீனா.

இதனால் தான், இந்த வைரசால் மிகப் பெரிய உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன என அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது.

இதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்றும், மிசௌரி மாகாணத்தில் நிகழ்ந்த மரணங்கள், பாதிப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் அனைத்திற்கும் சீன அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் மிசௌரி மாகாண தலைமை வழக்கறிஞர் எரிக் ஷ்மிட் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொரோனாவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடாக, 20 லட்சம் கோடி (20 டிரில்லியன்) அமெரிக்க டாலர்களை, சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும், அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இணைந்து ஏற்கனவே வழக்குத் தொடுத்துள்ளனர்.

ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றை வேண்டுமென்றே பரப்பி சீனா உலகை ஏமாற்றியுள்ளது.

Total Page Visits: 2628 - Today Page Visits: 4