ஒரே நாளில் USA , பிரான்ஸ் நாட்டில் 3,000 மக்கள் உயிரிழப்பு ! 5 இலட்சம் பேர் பாதிப்பு !

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,108 பேர் பலி -501,000 பேர் பாதிப்புஅமெரிக்காவில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில்சிக்கி ஒரே நாளில் 2,108 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இந்த நோயின்தாக்குதலில் சிக்கி இதுவரை 18,77 7 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து 501,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .ஆபத்தான நிலையில்பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர் .ஒரே நாளில் ஐந்தாயிரத்துக்குமேற்பட்ட மக்க பலியாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது . அமெரிக்க மக்கள் வரும் நாட்களில் வலிகளை சுமக்க வேண்டி வரும் என் டிரம்ப் அறிவித்திருந்ததது குறிப்பிடதக்கது.

பிரான்ஸ் நாடில் 987பேரை பலியெடுத்த கொரோனா !!

கடந்த 24 மணிநேரத்தில் 554 பேர் மருத்துமனைகளிலும், 433 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதுவரை மொத்தமாக 13 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ( மருத்துமனைகளில் 8 598, மூதாளர் இல்லங்களில் 4 599)

கடந்த 24 மணிநேரத்தில் 4 343 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 3 161 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகுதி 1 182 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது 7004 பேர் தீவிர சிகிச்சபை;பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, 34 வீதமானவர்கள் 60 வயதுக்கு உட்பட்;டவர்கள் என்றும், 98 பேர் 30வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 90 676 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, தற்போது 32 267 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038 பேர் பலி !

பிரிட்டனில் கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் படி கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 1,038பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 9,016 ஆக அதிகரித்துள்ளது.

அறுபத்தி ஐந்தாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .எதிர் வரும் நாட்களில் மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது.

ஆபத்தான நிலையில் சுமார் எட்டாயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவாசம் பெற்ற வண்ணம் உள்ளனர்

இவ்வாறு பெறுபவர்கள் அவர்களின் இறுதி நாட்கள் எண்ணப்படும் காலமாக மாற்றம் பெற்றுள்ளது ,

இவர்களது சுவாச காற்று வயர்கள் கழற்ற பட்டு விட்டால் அது மரணமாகவே அமையும் என்பது பாதிக்க பட்டவர்கள் கூறும் கருத்துக்களாக உள்ளன.

Total Page Visits: 1234 - Today Page Visits: 8