120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் ! இன்னமொரு சுஜித் !!

Subscribe our YouTube Channel



தெலுங் கானா மா நிலம் மேடக் மாவட்டத் தை சேர்ந்தவர் கோவர்தன். இவர் தனது மனை வி மற்றும் 3 வயது மகனுட ன் போச்சன் பள்ளி கிராமத்தி ல் உள்ள தனது தந்தை வீட்டுக்கு விடுமுறைக் காக சென்று உள்ளார்.

கோவர்தனி ன் தந்தை விவசாய நிலத்தில் கடந்த வாரம் 3 ஆழ்துளை கிணறுக ளை தோண்டி உள்ளார். அதில் தண்ணீர் கிடைக்காததால் அதை மூடி விடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினரும் அங்கு உடன் இருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அங்கு விளையாடிக் கொண்டிருந்த கோவர்தனின் 3 வயது மகன் 120 அடி ஆழம் உள்ள ஆழ் துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதனால் பதறிய சிறுவனின் குடும்பத்தினர் போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், தீய ணைப்பு வீரர்களும் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போர்வெல் இயந்திரங்கள் வரவழைக்கப் பட்டு சிறுவன் விழுந்த ஆழ் துளை கிணறு அருகே மற்றொரு கிணறு தோண்டப் பட்டது. இரவு நேரமானதால் விளக்குகள் பொருத்தப் பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந் நிலையில், இன்று காலை 3 வயது சிறுவனை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சடலமாக மீட்டது அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு திருச்சி மாவட்டம் மணப் பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியில் 2 வயது சிறுவன் சுஜித் ஆழ் துளை கிணற்றில் சிக்கி 60 மணி நேர போராட்டத்து க்கு பலனளிக்காமல் இறந்தது நினைவிருக்கலாம்.
நன்றி – மாலைமலர் இணையம்