சுமார் 3500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ராட்ச்சத விலங்குக ள் & யானை எலும்பு கண்டுபிடிப்பு !! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள் ! வீடியோ இணைப்பு !!

மெக்சிகோ நாட்டில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட் சத யானைகள் (மம்முத்) உள்ளி ட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மெக்சிகோ தலை நகர் மெக்சிகோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்த நாட்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சுமார் மூவாயிரத்து 500 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானை கள்(மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
கொலம்பியாவின் மிகப்பெரிய விலங்கினங்களி ன் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

ராட்சத யானை, காட்டு எருமை, ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றின் எலும்புக் கூடுகளுடன் மனித எலும்புக் கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என ஆய்வாளர்கள் கூறினர்.
பனியுக காலத்தின் விலங்குகளின் எலும்புக் கூடுகளை கண்டு பிடிப்பதில் இந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த டிசெம்பரில் இதே தொல்லி யல் குழுவினர் சிறு சிறு விலங்குகளின் எலும்புகளைக் கண்டெடுத்தது நினைவு கூரத்தக்கது. ஸ்பானிய காலனியாதிக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்தஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேசமயம் விமான நிலைய கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்துவதற் காகத்தான் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன என்ற கருத்தும் பொது மக்களிடையே நிலவுகிறது. ஆனால் தொல்லியல் குழு இதனை மறுத்து உள்ளது.