கொரோனா வைரஸ் எதிரொலி !! ஆன்லைன் கல்வி கற்க ஓவியங்களை வரைந்து விற்று கணனி வாங்கிய சிறுமி !! குவியும் பாராட்டுக்கள் !

கொலம்பியாவைச் சேர்ந்த எட்டு வயதேயான சிறுமி கணினி ஒன்றை வாங்குவதற்காக தான் வரையும் ஓவியங்களை விற்று வருகின்றார். கொரனோ வைரஸ் பரவலால் கொலம்பியாவின் பாடசாலைகள் மூடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு ஒன்லைன் மூலம் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கணினி இல்லாத ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இக் கட்டான நிலையில் மெற்ரேலில் வசிக்கும் எட்டு வயது நிரம்பிய ஆன்லீசன் ஹேல்ஸ் எனும் சிறுமி சொந்தமாக கணினி வாங்குவதற்காக தான் ஓவியம் வரைந்து உள்ளார்.

இதுவரை இந்த சிறுமி எண்பதிற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து விற்றுள்ளார். இச்சிறுமியின் முயற்சியானது கொலம்பியா முழுவதும் அவரைப் பிரபலப்படுத்தியதுடன் பலர் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர். இவரது ஓவியங்களை வாங்க பலர் முன் வந்துள்ளனர் .வீடியோ இணைக்கப்பட்டு உள்ளது .