நடிகை பிந்து மாதவியை 14 நாள்களுக்கு தனிமைபடுத்திய மாநகராட்சி !!

Subscribe our YouTube Channelநடிகையான பிந்து மாதவி வசித்து வரும் குடியிருப்பில் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நடிகையான பிந்து மாதவி வசித்து வருகின்றார்.

இந்தக்குடியிருப்பில் வசித்து வந்துள்ள நபர் ஒருவருக்கு கொரனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து இக் குடியிருப்பு கேற்றை மூடியுள்ள மாநகராட்சி அதிகாரிகள் அக்குடியிருப்பு வீட்டில் வசிப்போர் அனைவரையும் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இத்தகவல் உண்மையானது என்பதனை நடிகை பிந்துமாதவி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.அதுமட்டுமன்றி குடியிருப்புக் கேற்றினை மூடும் காட்சிகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு்ளார் பிந்துமாதவி.