பெருகி வரும் வெட்டுகிளிக ளை விரட்ட டிரோன்க ளை பயன்படுத்தும் விவசாயிகள் !! வீடியோ இணைப்பு !!

Subscribe our YouTube Channelஇராஜஸ்தானில் விவசாய நிலங்களில் அழிவை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகளை விரட்ட ஆளில்லாத டிரோன் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய வெட்டுக் கிளிகள் இராஜஸ்தானில் கடும் பாதிப்பினையும் சேதத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனை விரட்ட மத்திய வேளான் அமைச்சகத்தால் இராஜஸ்தான் அமைச்சிடம் ஆளில்லா டிரோன் விமானங்கள் கடந்த செவ்வாய் கிழமை கையளிக்கப்பட்டன. அதில் சில டிரோன்கள் ஜெப்பூரின் சோமுத்தாலுக்காவின் விவசாய நிலங்களில் இந்த வெட்டுக் கிளிகளை விரட்ட புதன் கிழமையிலிருந்து பயன்படுததப்பட்டு வருகின்றது.

வெட்டுக் கிளிகளை விட உயரமாகப் பறக்கும் திறன் கொண்ட டிரோன்களில் 10 லீற்றர் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இது போல் வெடடுக் கிளிகளை விரட்ட ஒரு வகையான சத்தத்தை எழுப்பவும் இதில் வழி செய்யப்பட்டு உள்ளது.
நன்றி – polimar News