இந்திய – சீன எல்லையில் போர் பதற்றம் !! குவியும் சீன இராணுவம் ! எவ்வேளையிலும் போர் வெடிக்கலாம் ! இராணுவ தளபதி எச்சரிக்கை !!

Subscribe our YouTube Channelகிழக்கு லாடாப்பில் ஹால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பால்ஹொல் ஏரிப் பகுியில் இந்திய சீனப்படைகளுக்கிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா லாடாப்பில் தனது எல்லைக்கு அப்பால் சுமார் ஐந்தாயிரம் துருப்புக்களை நிறுத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனை எதிரகொள்ளும் வகையில் இந்தியாவும் அங்கு தமது படைகளையும் போர்த்திரணையும் அதிகரிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹரகோரம் கணவாயில் அமைந்துள்ள இறுதி இராணுவச் சாவடியான தவுலக பேக் ஹோல்டி என்ற இடத்தில் இந்தியா பாலம் அமைப்பதை தடுக்கும் சீனாவின் முயற்சியை தவிடுபொடியாக்கவும் இந்தியா முயன்றுள்ளது.

இந்தப்பணி முடிவடைந்தால் அங்கு இந்தியாவின் இராணுவ நடவடிக்கை அதிகரிக்கும் என்பதனால் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா மிரட்டல் வேலையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த முக்கிய கூட்டத்தில் இந்தியாவின் எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நுழைய முற்படும் சீனாவின் அத்து மீறலை கட்டுப்பாட்டுடனும் உறுதியுடனும் முறியடிக்கப்படுவதற்கானஆலோசணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனிடையே ஏற்கனவே திட்டமிட்ட படி டெல்லியில் இராணுவத் தளபதி எம்.எம்.நரவானே தலைமையில் முக்கிய ஆலோசணைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. லடாப்பில் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்த மிக முக்கிய ஆலோசனையை இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளுடன் நரவானே நடாத்தினார்.

சீனத் துருப்புகள் இந்திய இராணுவத்தின் ரோந்துப் பணிகளுக்கு குழப்பம் விளைவிக்கும் நிலையில் தமது துருப்புக்கள் பொறுப்புடன் எல்லையைக் காத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலதிக செய்தி – இரண்டாம் பாகம் பின் இணைப்பு

இந்தியா சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் போருக்கு தயாராகுங்கள் என்று சீனா நாட்டு இராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ரிச்சன் பிங் உத்தரவிட்டுள்ளார். இந்த போர்ப்பதற்றம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி அவசரக் கூட்டம் நடாத்தினார்.

சீனாவின் தலைவர் சீஜிங் பிங் இதே போன்று சீனாவின் இராணுவத் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பல முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டதுடன் சீன நாட்டு இராணுவங்கள் போருக்கு தயாராக வேண்டும்.

படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் . அவர்கள் தீவிர பயிற்சி எடுக்க வேண்டும். படைள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும். சீனாவையும் அதன் கட்டமைப்பையும் காக்க என்ன வேண்டுமென்றாலும் செய்ய அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.போருக்கான ஆயத்தங்களை இராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

நாம் கொரனாவை வென்று விட்டோம் . இதற்கு தீவிரமாகச் செயற்படும் இராணுவத்தை மையமாகக் கொண்ட ஆட்சியும் தான் காரணம் என சீஜிங் பிங் கூறியுள்ளார். அவர் தனது பேச்சில் இந்தியா குறித்து எதுவும் பேசவில்லை.இந்தயாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. பிற நாடுகள் குறித்தும் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.