ஆட்டுக் குட்டிக் கு வாஞ்சையு டன் பால் கொடுக் கும் நாயின் தாய்ப் பாசம் !!

இந்தியா வின் தமிழ் நாட்டின் மதுரை மாவட் டம் கேசம் பட்டி என்னும் கிராமத் தில் ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் நெகிழ்ச்சி யான சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த தெய்வ ம் என்பவர், இந்தக் கிராமத் தில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவர் வளர்த்த ஆடு ஒன்று, சில மாதங்களுக்கு முன் குறை மாதக் குட்டி ஒன்றை ஈன்று இறந்து விட்டது. அந்த ஆட்டுக்குட்டிக்கு பால் டப்பா மூலம் பசும் பால் கொடுத்துக் காப்பாற்றி வந்தார் தெய்வம்.

அவர் கடையில் ஒரு நாயை யும் வளர்த்து வந்தார். அந்த நாயும் குட்டிகளை ஈன்று குட்டிகளுக் குப் பால் கொடுத்து வந்தது. நாளடைவில் அந்த நாய், ஆட்டுக் குட்டிக்கும் பால் கொடுக்க ஆரம்பித்து உள்ளது . ஒரு நாள், ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுத்த காட்சியைக் கண்ட தெய்வம் ஆச்சரியப்பட்டு மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார்.

“மனிதர்கள் இடை யே பல பாகுபாடு களும் வேறு பாடுகளும் இருக்கும் போது, இந்த விலங்குகளி டம் இப்படி ஒரு பாகுபாட ற்ற உணர்வு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்றார் அவர்.

இவரது டீக் கடைக்கு வரும் வாடிக்கையாளர் கள், இந்தக் காட்சியை க் கண்டு வியப்படைகின்றனர் . ஆட்டுக் குட்டிக்கு நாய் பால் கொடுக்கும் புகைப்படங்கள் ஃபேஸ் புக், வாட்ஸ் அப் என்று சமூகவலை தளங்களிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளன.

Total Page Visits: 1317 - Today Page Visits: 2