சீனாவின் ஓரிஜினல் தயாரிப்பு ”கொரோனா வைரஸ் ”…! விரைவில் ஆதாரத்தை வெளியிடுவேன் – ட்ரம்ப் ஆவேசம் !

மெரிக்காவில் கொ ரோனா வைரஸ் மிக உ ச்சத்தில் ப ரவியிருக்கும் நிலையில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மே- 01 ஆம் தி கதி வரை 63,856 பேர் இறந்திருக்கிற நிலையில் அ மெரிக்க அதிபர் ட்ரம்ப் இது குறித்த அ ரசியலில் தீவிரமாக இ ருக்கிறார்.

சீனாவின் வுஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கான ஆ தாரங்கள் தன்னிடம் இ ருப்பதாக டொ னால்ட் ட்ரம்ப் ஏப்ரல்- 30ஆம் திகதி தெரிவித்தார்.

ஃபாக்ஸ் நியூஸ் செ ய்தி நிறுவனத்தின் நிருபர் ஜான் ராபர்ட்ஸிடம் பே சிய ட்ரம்ப், “வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியிலிருந்து இந்த வை ரஸ் உருவானது என்பதற்கான நம்பகமான ஆதாரம் இ ருக்கிறது. ஆனால், அதை இ ப்போது வெளியிட முடியாது” என ட்ரம்ப் கூ றினார்.

ராபர்ட்ஸ் மீ ண்டும் ட்ரம்பை அழுத்தி… உ றுதியான ஆதாரங்கள் உள்ளதா? என்று கேட்டார். “இ யற்கையாக நிகழும் வைரஸ் அல்ல இது. அது எ ங்கிருந்து வந்தது என்பதை நாங்கள் பார்க்கப் போகிறோம். வி ஞ்ஞானிகள், உளவுத் துறை அனைவரையும் ஒன்றாக இணைக்கப் போகிறோம். இ றுதியில் ஒரு நல்ல பதில் கிடைக்கும்” என்றார் ட்ரம்ப்.

“இது வுஹான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியிலிருந்து தோ ன்றியதுதான் என்பதற்கு உங்களுக்கு அதிக நம்பிக்கை எது?” என்று ராபர்ட்ஸ் மீ ண்டும் கேட்டார். அப்போது ட்ரம்ப், “அதை என்னால் சொல்ல முடியாது” என்று கூறினார். “அதை உங்களுக்குச் சொல்ல எ னக்கு அனுமதியில்லை” என்றார் ட்ரம்ப்.

இதேவேளை, அ மெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குநர் அலுவலகம் ஓர் அ றிக்கையை வெளியிட்ட பின்னரே ட்ரம்பின் கருத்துக்கள் வெ ளிவந்துள்ளன.

ஏ ற்கனவே சீனாவுக்கும், அ மெரிக்காவுக்கும் இடையே கொரோனா வைரஸ் தொடர்பாக கடுமையான மோ தல்கள் நடக்கும் நிலையில் ட்ரம்பின் இந்தக் கருத்து அதை மேலும் க டுமையாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.