லாக் டவுன் நாட்களை திறமையாக பயன்படுத்திய மாண வி !! 50 நாட்களி ல் பல லட்ச வருமானம் !! வீடியோ இணைப்பு !!

ஊரடங்கு காலத்தை பயனுள்ள நாட்களாகவும் பணமீட்டும் நாட்களாகவும் உபயோகப்படுத்தி உள்ளார் கோவையைச் சேர்ந்த மாணவி.களி மண்ணினால் வீட்டுப் உபயோகப் பொருட்கள் , பொம்மைகள் மட்டுமல்ல நகைகளும் செய்யப்படுகின்றன.

“தெரக்கோட்டா நகைகள்” எனப்படும் அவற்றை இன்றைய காலத்திற்கு உகந்தாற்போல் வடிவமைத்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளார் கோவையைச் சேர்ந்த ஸ்பிரித்தி.சிறுவயது முதலே கலைகளின் மீது அதிக ஆர்வமுள்ள இவர் ,

தற்போது Fashion technology படித்து வருகின்றார். கல்லூரி நேரம் தவிர்ந்த கிடைக்கும் நேரங்களில் களி மண் நகைகளை உருவாக்கி விற்பனை செய்து வந்த ஸ்பிரித்திக்கு ஊரடங்கு நாட்கள் பொன்னான நாட்களாக அமைந்தன.

இது தொடர்பில் அவரிடம் வினவிய போது “கல்லூரி செல்லும் போது தெரக்கோட்டாக்கு செலவிட நேரமில்லை.என்னால் புதிது புதிதாக தயாரிப்புக்களை மேற்கொள்ள முடியவில்லை.வர வர ஓடர்கள் செய்யவே நேரம் போதுமானதாக இருந்தது.

ஆகவே Lockdown காலத்தில் நேரத்தை செலவிடக் கூடியதாக இருந்தது. புதிது புதிதாக தயாரிப்புக்களை மேற்கொள்ள முடிந்தது. ஒரு தாயாரிப்பு என்றாலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நிறைய நேரம் செலவிட்டு தனித்துவமாக தயாரிக்க முடிந்ததாம் ” என்றார் ஸ்பிரித்தி.

காலை முதல் மாலை வரை அழகிய ஆபரணங்களை உருவாக்குவதும் இரவில் ஒன்லைனில் பாடம் கற்பதும் என வீட்டுக்குள்ளேயே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றார் ஸ்பிரித்தி. தெரக்கோட்டா நகைகள் குறித்து அவரிடும் பதிவுகள் மூலமாக ஓடர்கள் கிடைக்கப்பெறுகின்றது.

இதன் மூலம் மட்டும் கடந்த ஐம்பது நாட்களில் மட்டும் இரண்டு இலச்சம் ரூபாவினை ஈட்டியுள்ளார்.இவரது தந்தை இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் , அவுஸ்ரெலியா டேவின் ஜோன்ஸ் என்பது பெரிய Fashion store .

அவர்கள் ஸ்பித்தியின் டிசைனினை ஆதரித்து வருகின்றார்கள் என்றால் இவர் இன்று நான்கு பேரிற்கு தொழில் முனைவோரை முன்னேற்றுவதாக இருக்கும் போது கண்டிப்பாக பெருமையாக இருக்கிறது.

அதனால் ஒவ்வொரு பெற்றோரும் தம்முடைய குழந்தைகளுக்குள் புதைந்து கிடக்கின்ற ஆசைகளையும் கனவுகளையும் வெளிக்கொணர வேண்டும் என்கின்றார்.இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி சேவைக்கு ஸ்பிரித்தி வழங்கிய நேர்காணல் வீடியோ இணைப்பு .
நன்றி – புதிய தலைமுறை டிவி