இலவச சிகரெட் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மது பிரியர் !! மதுரையில் பரபரப்பு சம்பவம் !!

Subscribe our YouTube Channelமதுரை நாகமலைப் புதுக்கோட்டை அச்சம்பத்து பகுதியில் டீக்கடை ஒன்றை நடாத்தி வந்துள்ளார் சுவாமி நாதன். இவர் செவ்வாய்க் கிழமை கடையினைப் பூட்டி விட்டு வீடு சென்ற நிலையில் நள்ளிரவு அவரது கடையில் தீ கொழுந்து விட்டு எரிந்ததுள்ளது.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வீதியால் சென்றவர்கள் திரண்டு வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்னர் கடை முழுவதும் எரிந்து தீக்கரையாகியது. இச்சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்த நாகமலை புதுக்கோட்டை பொலீசார் அருகிலுள்ள கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கானொளிக்க காட்சிகளை வைத்து அப்பகுதியில் உலாவித்திரிந்த குணசேகரன் என்பவர் டீக்கடைக்கு தீவைத்ததை கண்டுபிடித்தனர் .

இவரைப் பிடித்து விசாரித்த போது கொரோனா ஊரடங்கு சமயத்தில் பூமிநாதனின் கடையில் இலவசமாக சிகரெட் கேட்டதாகவும் அதற்கு பூமிநாதன் தர மறுத்ததாகவும் அதற்கு டீக்கடையை எரித்து விடுவேன் என விட்ட சவாலை நிறைவேற்ற கடையை எரித்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் தீ வைத்ததாக மூன்று வழக்குகள் இருப்பதாகவும் தான் கேட்டதைக் கொடுக்கா விட்டால் தீ வைப்பதை இந்த ப்பயர் குணசேகரன் வழமையாகக் கொண்டுள்ளான்.