விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல் !! அதிரடியாக இரு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கா ! நேரலை வீடியோ இணைப்பு !!

Subscribe our YouTube Channelஅமெரிக்காவின் “SPACEX” நிறுவனம் சார்பில் இன்று ஏவப்படும் ரொக்கற்றில் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பபடவுள்ளனர். புளோரிடாவில் உள்ள ஹெனடி ரொக்கற் ஏவுதளத்திலிருந்து இலங்கை நேரப்படி இன்று 8.30 மணிக்கு பால்ஹன் 9 எனும் ரொக்கற் ஏவப்படுகின்றது.

ரொக்கற்றை ஏவுவதற்கான countdown தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.நாசாவைச் சேர்ந்த பாப்பன்ஹென் மற்றும் டக்ஹலி ஓஷோ எனும் இரண்டு வீரர்கள் பால்ஹன் 9 ரொக்கற்றில் பயணிக்கவுள்ளனர்.

SPACEX நிறுவனத்தின் ரொக்கற் மூலமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது இதுவே முதல் தடவையாகும். 2011 இல் இருந்து நாஸா தனது விண்வெளி ரொக்கற் மூலமாக மனிதர்களை அனுப்புவதில்லை என்பதும் ரஷ்யாவின் சொய்ஸ் விண்கலம் மூலமே அனுப்பி வருவதும் குறிப்பிட்தக்கது.இது தொடர்பான வீடியோ இணைப்பு ……

SpaceX and NASA launching humans to space for the first time!