அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் !! காரணம் இது தான் !

Subscribe our YouTube Channelஉலக ஜனாதிபதிகள் பட்டியலில் அதிக சர்ச்சை கருத்துகளை சொல்லி சிக்கலில் மாட்டும் ஜனாதிபதி என்றால் அது டிரம்ப் தான் .அந்த வகையில் புதிய சர்ச்சை கருத்தால் டுவிட்டர் வலைதளத்திடம் இப்படி அவமானபட்டு உள்ளார் .

அமெரிக்க ஜனாதிப தி டொனால் டு டிரம்ப், தினந் தோறும் ‘டுவிட்டர்‘ சமூக வலைத் தளத்தை பயன்படுத்தி வருகிறார். எதிர்க் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களை விமர்சிப்பதற் கும் உபயோகப்படுத்துகிறார். அவரை டுவிட்டரில் 8 கோடி பேர் பின்பற்றி (Follow) வருகிறார்கள்.

அமெரிக்க ஜனாதிப தி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடக்கிறது. அதில், டிரம்ப் மீண்டும் போட்டியிடுகி றார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமா க, வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்களிப் பதில் தங்களுக்கு தயக்கம் இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பில் 60 சதவீத வாக்காளர் கள் தெரிவித்தனர்.

எனவே, மெயில்-இன் (தபால்) வாக்கு வசதி யை பெரும் பாலானோருக்கு அளிப்பதற்காக, எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா, மிச் சிகன் மாகாண கவர்னர்கள், வாக்காளர்களின் வீட்டுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை அனுப்பி வருகிறார்கள்.

இதை விமர்சித் து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன் தினம் 2 ‘டுவிட்‘களை பதிவு செய்தார் . அவற்றில் அவர் கூறியிருந்த தாவது , தபால் வாக்குச் சீட்டுகள், மோசடிக்கு வழி வகுக்கும்.

சட்ட விரோதமாக வாக்குச் சீட்டுகள் அச்சு அடிக்கப்பட்டு, மோசடியாக கையெழுத்து போடப் படலாம். ஏனென்றால், கலி போர்னியா கவர்னர் லட்சக்கணக்கானோருக்கு தபால் வாக்குச் சீட்டுகளை அனுப்பி வருகிறார்.

இதற்கு இடையே, இந்த 2 டுவிட்களும் ‘பொய் ஆனவை‘ என்ற அர்த்தம் அளிக்கும் வகையில், அவற்றுக்கு கீழே “தபால் வாக்குச் சீட்டு குறித்த உண்மையை சரி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ஒரு எச்சரிக்கை குறிப்பை ‘டுவிட்டர்’ இணைத்து உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் !! காரணம் இது தான் !

இந்த டுவிட்கள், மக்களை தவறாக வழி நடத்தக் கூடியவை என்று ‘டுவிட்டர்’ செய்தித் தொடர்பாளர் ட்ரன்டன் கென்னடி கூறினார்.டிரம்பின் ‘டுவிட்‘களை இது போன்று ‘டுவிட்டர்‘ அடையாளப்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும். தவறான தகவல்களை அடையாளப் படுத்தும் முறையை சமீபத்தில் அந் நிறுவனம் கொண்டு வந்தது.

ஆனால், டுவிட்டரின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.அவர் தனது பதிவில், “டுவிட்டர், தற்போது ஜனாதிப தி தேர்தலில் தலையிடுகிறது. CNN, அமேசான் வாஷிங் டன் போஸ்ட் ஆகியவை சரி பார்த்ததன் அடிப்படையில், எனது டுவிட்களை பொய் என்று கூறியுள்ளது.

டுவிட்டர், பேச்சு உரிமையை நசுக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில், இதை நான் அனுமதிக்கமாட் டேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார். டிரம்பின் பிரசார நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
Source – மாலைமலர் இணையம்