அமெரிக்க கருபினத்தவர் கழுத்து நெரித்து கொலை செய்த போலீசார் : தொடர் கலவரத்தால் அதிரும் அமெரிக்கா !! களமிறங்கும் இராணுவம்!

Subscribe our YouTube Channel



அமெரிக்கா நாட்டின் மின்ன பொலிஸ் எனும் நகரில், கடந்த 25-ஆம் தேதி, ஜார்ஜ் பிளாய் டு என்ற கறுப்பு இனத்து இளைஞரை, சந்தேகத் தின் அடிப் படையில் விசாரித் த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரை யில் தள்ளி கழுத் தை காலா ல் நசுக்கினார்.

இதில், ஜார்ஜ்பிளாய்டு, சம்பவ இடத்திலே யே பரிதாபமா க உயிரிழந்தார். இதை அடுத்து, போலீசாரின் செயலு க்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்ன பொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங் கள் வெடித்தன.

மின சோட்டா,ஜார் ஜியா,ஓஹியோ,கொள ராடோ,விஸ் கான்சின்,கென் டக்கி,உட்டா,டெக்சாஸ்,கொலம்பி யா ஆகிய மாநிலங்களில் நிலமை மோச மாக உள்ளது போராட்டங் கள் வெடித்து உள்ளன.

இந்த நிலையில், ஜார்ஜ் பிளாய் டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக்சவு வின், 44, கைது செய்யப் பட்டு, அவர் மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு இடையே, மின்ன பொலிசில் போராட்டக் காரர்களை கட்டுப் படுத்த, நேற்று முன் தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இருப்பினும் ஊரடங் கை பொருட் படுத்தாமல், ஆயிரக்கணக் கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப் பட்டன. பல மணி நேரமா க எரிந்த தீயை, தீ அணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப் படுத்தினர்.

இதற்கு இடையே, மின்ன பொலிசில் போராட்டக்காரர் களை கட்டுப் படுத்த, அமெரிக்க இராணுவத்தின் போலீஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ் சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

புரூக்ளினில் போராட்டத் தில் ஈடு பட்டோர் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டு களை வீசினர்.ஹூஸ்டனில் நடந்த பேரணியி ல், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு இனத்தவர் சாவுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டம் !

அமெரிக்காவி ல் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரா ல் கொல்லப்படு வது தொடர் கதை ஆகி வருகிறது.அந்த வரிசையில், மின்ன சோட்டா மாகாணம், மின்ன போலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது.

அவரது மரணத்து க்கு நீதி கேட்டு நாடு மின்ன சோட்டா, நியூயார்க், அட் லாண்டா என பல பகுதிகளிலும் கருப்பர் இனமக்கள் திரண்டு போராட்டங் களை நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டங்களின் போது போலீசாருக் கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன.

போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுக ளை வெடித்து போராட்டக் காரர்களை விரட்டி அடித்தனர் . லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட் லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியி ன் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பு நேற்று முன் தினம் மாலை போராட்டக்காரர் கள், ஜார்ஜ் பிளாய்டின் புகைப் படங்களை ஏந்தி திரண்டு வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளி கை சிறிது நேரம் பூட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது.