யூடூப் வீடியோ பார்த்து நூதன முறையில் திருட்டு !! போலீசாரிடம் சிக்கியது எப்படி ?

சென்னையில் வாகனத்திருட்டு வழமையாக இடம்பெறும் நிகழ்வாக உள்ளது.அதாவது வாகனங்களைத் திருடுபவர்கள் அதன் உதிரிப்பாகங்களை கழற்றி விற்று விடுவது நாம் அறிந்த விடயமாகும்.

இந்த முறையில் வாகனத் திருடர்கள் பொலீசாரிடம் அரிதாகச் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகம்.இதனைத் தடுக்க சற்று வித்தியாசமான முறையைக் கையாண்டுள்ளார் தற்போது சிக்கியுள்ள வாகனத் திருடன்.

சென்னை கொரட்டூர் அக்கிரகார ஊரைச் சேர்ந்த ரமேஷ் என்ற நபர் தியாகராஜநகர்,கோயம்பத்தூர் எனும் பகுதிகளின் பார்க்கிங்கி்ல் லொக் செய்யப்பட்டிராத இருசக்கர வாகனங்களில் இருந்து முதலில் ஆர்.சி புத்தகங்களை திருடி வைத்துக் கொள்வது வழமை.

அதே மாடலான இருசக்கரவண்டிகள் எங்காவது சாவிகளுடன் நின்றாலோ அல்லது வைத்திருக்கும் போலிச்சாவிகளுடன் பொருந்தினாலோ அவ்வாகனத்தைத் திருடி தன்வசமுள்ள ஆர்.சி புத்தகத்தில் உள்ளவாறு வண்டியின் பெயின்ட் , பதிவு எண் , எஞ்சின் நம்பர் என்பவற்றை மாற்றி விடுவார்.

பின்பு அவ்வாகனத்தை புகைப்படம் எடுத்து ஓ.எல்.எக்ஸ் இல் பதிவேற்றி விற்றுவிடுவாராம் என்கிறார்கள் பொலீசார். ஆர்.சி புத்தகத்தைப் பறிகொடுத்த உரிமையாளர்கள் வேறு ஒன்றை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்வார்கள்.

அதிலுள்ள விபரங்களைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட வாகனம் பொலீசாரின் சந்தேக வட்டாரத்திற்கு வராது. வாகனங்களைளப் பறிகொடுத்தவர்களாலும் இறுதி வரை தமது வாகனம் என இனங்காண முடியாது என்பது ரமேஷின் நினைப்பு.

ஓ.எல்.எக்ஸில் வாகனங்களை விற்பனை செய்வதற்கு என்றே பல சிம் கார்ட்டினை வாங்கி வைத்துள்ளான் ரமேஷ். ஓ.எல்.எக்ஸ் இல் ஐ.டி களை உருவாக்கி திருடிய வாகனங்களை விற்ற பின் அந்த சிம் கார்ட் மூலமாக உரையாடிய உரையாடல் குறுஞ்செய்திகள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு உடைத்து போட்டு விடுவான் என்கின்றனர் போலீசார்.

அதனால் வாகனத்தை வாங்கிய நபர் பொலீசாரிடம் சிக்கினால் கூட மீண்டும் ரமேஷை தொடர்பு கொள்ள முடியாது. இவ்வாறு ஓ.எல்.எக்ஸ் மூலம் ரமேஷ் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை இருபத்திரண்டாகும்.

டிப்லோமா மெக்கானிக்கான ரமேஷ் Youtube ஐ பார்த்து ஆவணத் திருட்டிற்கான பல்வேறு நுட்பங்களைக் கற்றுக் கொண்டு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலீசார் கருத்து தெரிவித்தனர்.

வாகனத்திருட்டுப் புகார் ஒன்றில் சி.சி.டிவி காட்சிகளை வைத்து ரமேஷை மடக்கிப் பிடித்துள்ளனர். இந்நபரிடமிருந்து பன்னிரண்டு இருசக்கர வாகனங்கள், ரில்லர் இயந்திரம், சேஸிஸ் எண்களை மாற்றுவதற்கான டைகள் , பெயின்டுகள், கைக் கருவிகள், இரண்டு அசல் வாகனப் பதிவுப் புத்தகங்கள் , சிம்கார்டுகள் என்பவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இவனிடமிருந்து ஓ.எல்.எக்ஸ் மூலம் வாங்கப்பட்ட மூன்று திருட்டு வாகனங்களையும் அடையாளம் கண்டுள்ள பெிலீசார அவற்றையும் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரமேஷ் போன்று தினந்தோறும் பற்பல விதத்தில் முளைக்கும் வாகனத் திருடர்களிடம் எமது வாகனங்களைப் பாதுகாத்து கொள்வது நமது கையிலே உள்ளது.