பின் தொடர்ந்து வந்த கரடி.! சாதுர்யமாக செயல்பட்டு தப்பிய சிறுவன்.! வைரல் வீடியோ.!

Subscribe our YouTube Channel

வடக்கு இத்தாலியில் ட்ரெண்டினோ மலைப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனை கரடி ஒன்று திடீரென தாக்க வந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது மகனுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

அப்போது சிறுவன் அங்கிருந்த மலர்களை பார்த்துக் கொண்டிருந்தான். தீடீரென கரடியொன்று சிறுவனின் பின்னால் மெதுவாக வந்துள்ளது.

இதை பார்த்த அந்த பெண் சிறுவனிடம் எந்த ஒலியை எழுப்பாமல் அமைதியாக கீழே இறங்கி வரும்படி கூறினார்.. சிறுவனும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இறங்கி வந்து விட்டான். இதனால் கரடி முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாமல் சிறிது பின்னால் வந்துள்ளது.

சில தூரம் அவர்களை பின்தொடர்ந்து வந்த கரடி மீண்டும் தனது பாதையில் திரும்பி சென்றுவிட்டது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . சிறுவனை அவரது தாய் சரியாக வழிநடத்தியதால் சிறுவன் தப்பினான் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.