நீச்சல் குளத்தில் முழ்கிப் பலியான அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவின் நியுயெர்சியில் இந்திய வம்சாவழியினர் 3கோடி ரூபாய் மதிப்பில் வீடுஒன்றை வாங்கி அதில் குடியேறியினர். அவ்வீட்டில் அவர்கள் ஒரு மாதம் கூட சரியாக வசிக்காமல் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்த அன்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அயலவர் பொலிசாரை அழைத்தனர். பொலிஸார் வந்து பார்த்த பொது வீட்டின் பின் புறம் உள்ள நீச்சல் குளத்தில் குடும்ப உறுப்பினர்களில் மூவர் இறந்து கிடப்பதை பார்த்தனர்.

பரத் பட்டேல் (62), அவரது மருமகள் நிஷா பட்டேல் வயது 33 மற்றும் அவரது 8வயது மக்கள் ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர். அவர்களின் உடலை பரிசோதித்த மருத்துவக் குழுவினர், விபத்து என தெரிவித்தனர். ஊழல்கள் உடற்குரு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இது குறித்து அயலவர்கள் தெரிவிக்கையில், வீட்டிலுள்ள நீச்சல் குளத்தில் ஏற்பட்ட கோளாறே உயிரிழப்புக்கு காரணமென தெரிவித்தனர்.