நடிகர் சுஷாந்தின் மரணம் கொலையா ? தற்கொலையா..? அதிரும் புதிய திருப்பங்கள் ! VIDEO

Subscribe our YouTube Channel

இளம் நடிகரான சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் திகதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணம் குறித்து பலரும் பல்வேறு விதமான சர்ச்சை கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். பாலிவுட்டில் கான்கள் மற்றும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது .

புது நடிகர்களை அவர்கள் வளர விடுவதில்லை என்று கூறப்படுகிறது. சல்மான்கான் பட இயக்குனரின் கருத்துக்களும் இதற்கு தீனி போடும் விதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தற்கொலை செய்யவில்லை திட்டமிட்டே கொலை செய்யப்பட்டார் எனவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியானது மக்கள் மனதில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுஷாந்தின் மரணத்துக்கு முன் அவரின் வீட்டு சிசிடிவிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சுஷாந்தின் கை ரேகைகள் அவரது அறையில் இல்லை.இடது கையின் இரு விரல்களில் ரேகை மட்டும் போர்வைவையில் இருந்துள்ளன.ஆனால் சுஷாந்துக்கு இடது கை பழக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்தின் முன்னாள் காதலியின் இந்நாள் காதலரான மகேஷ் பட், சுஷாந்த் மரணத்துக்கு முன்னர் அளித்துள்ள பேட்டியில் ‘சுஷாந்த் தற்கொலை தான் செய்து கொள்வர்’ என கூறியுள்ளார்.

சுஷாந்தின் மரணம் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக்கிக் கொண்டிருக்கிறது. உண்மை அறியாமல் பகிரப்படும் செய்திகள் அவரது இரசிகர்களை மேலும் காயப்படுத்துவதாக அமைகிறது. சுஷாந்தின் மரணம் தொடர்பான உண்மை தன்மை பொலிஸின் விசாரணையிலேயே தெரிய வரும்.

இந்நிலையில் சுஷாந்தின் மரணம் திரைப்படம் ஆகவுள்ளது.பரபரப்பான விஷயங்களை படமாக்குவதில் திரைத்துறையினருக்கு இருக்கும் ஆர்வமே தனி. இப்படத்திற்கு” கொலையா தற்கொலையா ஒரு நடிகன் மறைந்து விட்டான்” என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை ஷாமிக் மௌலிக் என்பவர் இயக்குகிறார். சினிமா பின்புலம் இல்லாமல் வருபவர்களை இத்திரையுலகம் எப்படி நடத்துகிறது.அவர்கள் தங்கள் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள எப்படியெல்லாம் போராடவேண்டியிருக்கிறது என்பது பற்றியெல்லாம் இப்படம் பேச இருக்கிறது.பாலிவுட்டை மையப்படுத்தி இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.