நடிகையை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கு..! மலையாள நடிகருக்கு தொடர்பு.! வலு சேர்க்கும் ஆதாரங்கள்.!

Subscribe our YouTube Channel

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து செல்போனில் படம்பிடித்த சம்பவம் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில்,கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பிரபல மலையாள நடிகர் திலீப்பும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு 85 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைதடுத்து, தினமும் சாட்சிகள் வாக்குமூலம் அளித்து வந்தனர்.

ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் உள்ளிட்ட சில நடிகைகள் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது. மலையாள நடிகர் லால், இடைவேளை பாபு ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் 24-ம் திகதி விசாரணையை நிறுத்தி வைத்தனர்.

தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி உள்ளது. ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரிடமும் குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.