நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல்.! பொலிஸில் தஞ்சமடைந்த நடிகை.! TIKTOK ஆல் நடந்த விபரீதம்.! VIDEO !

Subscribe our YouTube Channel

நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியவர்களை கேரள பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூர்ணா . தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு , கந்தகோட்டை , துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘ஷாம்னா காசிம்’ என்பது இவரின் இயற்பெயர் ஆகும்.இவர் கேரளா மாநிலம் மாறாடு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில்,கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நடைபெறாததால் வீட்டில் இருந்தபடியே தனது இயற்பெயரான ஷாம்னா காசிம் என்ற பெயரில் tiktok தொடங்கி தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் திருமண மோசடி கும்பல் ஒன்று பணம் கேட்டு மிரட்டுவதாக பூர்ணாவின் தாயார் பொலிஸில் புகார் அளித்தர் .கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அன்வர் அலி’ என்ற பெயர் கொண்ட ஒருவர் பூர்ணாவுக்கு tiktok கில் அறிமுகமானார்.அவர் கோழிக்கூட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நடிகை பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதனை உண்மையென நம்பிய பூர்ணா,தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்க கூறியுள்ளார்.கடந்த 3ம் திகதி 6பேர் கொண்ட குழுவொன்று அவரின் உறவினர்கள் எனக் கூறி பூர்ணா விட்டிக்குச் சென்றுள்ளது.ஆனால் tiktok ல் பழகிய அன்வர் மட்டும் வரவில்லை.

சுதாகரித்துக் கொண்ட பூர்ணா திருமணம் குறித்த பேச்சை இன்னொருநாள் வைத்துக்கொள்ளலாம் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார்.பூர்ணாவின் வீட்டுக்கு வந்த கும்பல் அங்கிருந்த கார் மற்றும் வெளிப்புற பகுதி ஆகியவற்றை செல்போனில் படம் பிடித்து சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனை தொடர்ந்து அன்வர் என்ற திக்தக கீழ் பேசியவர் போலி என்பதையும் ரஃபிக் என்பது அவரது உண்மையான பெயர் என்பதையும் தெரிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த கேரள பொலிஸார் தற்போது ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பல் பூர்ணாவை காதல் வலையில் வீழ்த்தி மோசடியில் ஈடுபட திட்டமிட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.