அமெரிக்க அதிபரின் அறிவிப்புக்கு சுந்தர் பிச்சையின் தில்லான பதிவு.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர்.பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவின் நடவடிக்கைகளில் சில சீர்திருத்தங்களை கொண்டு வர போவதாக அறிவித்தார்.

இதன் முதற் கட்டமாக H 1 B விசா உள்ளிட்ட பல விசாக்களை நடப்பாண்டு டிசம்பர் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அத்துடன் அதற்கான உத்தரவுகளிலும் அவர் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்கவே இவ் உத்தரவை பிறப்பித்ததாக அதிபர் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களுடன் குடியேறி இருக்கும் வெளிநாட்டவருக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ட்ரம்பின் இவ் உத்தரவுக்கு google CEO சுந்தர்பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில்,அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வெளிநாட்டை சேர்ந்தவர்களே. அவர்களின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே இருந்ததுள்ளது.

அதிபர் டிரம்மில் இந்த உத்தரவானது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு என் ஆதரவு எப்பொழுதும் உண்டு. எல்லோருக்கும் வாய்ப்புகள் பரந்து கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சுந்தர்பிச்சையின் இப்பதிவு பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.