உங்கள் வங்கி கணக்கு ATM இ யந்திரத்தை தொ டாமலேயே ப ணம் எடுக்கலாம் ! VIDEO

Subscribe our YouTube Channel

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ATM இயந்திரத்தை தொடாமலே QR CODE மூலம் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் அமுலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறிஷர் வங்கியால் அங்கிகரிக்கப்பட்ட எம்.பே. பேய்மென்ட் சிஸ்ரம் என்ற நிறுவனம் பிரபல மாஸ்ரர் கார்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த cardless ATM சேவையினை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 40000 ATM கள் தயார் செய்யப்பட்ட உள்ளதாக மாஸ்ரர் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி வாடிக்கையாளரின் செல்போனிலுள்ள வங்கி net banking செயலியை திறந்து cardless ATM இருக்கும் இயந்திரத்தில் காட்டும் QR CODE இனை scan செய்து பின் எடுக்க வேண்டிய தொகையை செயலியிலேயே பதிவு செய்தால் போதும் பணம் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்தும் ATM மூலம் வைரஸ் தொற்றுவதை தடுக்கலாம் என நம்பப்படுகின்றது.