லடாக் எல்லை மோதல் ! இரும்பு கம்புகளில் ஆணிகளை பொருத்தி இந்திய இராணுவம் மீது தாக்குதல் !

Subscribe our YouTube Channel

இந்தியாவின் , லடாக், கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15ம் தேதி நள்ளிரவு இந்திய – சீனப் படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.அம்மோதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இருப்பவை ஆணிகள் பொருத்தப்பட்ட வலுவான இரும்புக் கம்பிகளாகும்.

இந்திய – சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்தியப் படையினர் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இந்திய அரசு கூறியது. இருப்பினும் சீனாவிலிருந்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் ஏதும் இல்லை.

இச் சம்பவத்தை தொடர்ந்து இரு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுகின்றன. தங்கள் பகுதியில் எதிராளி ஊடுருவியதாக இரு தரப்பும் புகார் கூறுகின்றன. இந்நிலையில் எல்லையில் இந்திய இராணுவத்தினரைத் தக்க பயன்பட்ட ஆயுதத்தின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லை மோதல் ! இரும்பு கம்புகளில் ஆணிகளை பொருத்தி இந்திய இராணுவம் மீது தாக்குதல் !
இந்திய லடாக் எல்லையில் முறையற்ற தாக்குதலி ல் ஈடு பட்ட சீன ரா ணுவம்.