லடாக் எல்லை பகுதியில் இந்திய இராணுவம் குவிப்பு : பின்வாங்கிய சீன இராணுவம் ! வீடியோ இணைப்பு !!

Subscribe our YouTube Channelகிழக்கு லாடாக்பகுதியில் கடந்த மாதம் சீனா அதிகபடியான இராணுவ துருப்புக்களை குவித்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய இராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்குமிடையே அசாதாரண சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலைமையை கட்டுக்குள் காெண்டு வர இரு தரப்பு இராணுவ அதிகாரிகளிடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொளளப்பட்ட போதும் சுமூகமான முடிவு எட்டப்பட வில்லை . இது தொடர்பில் வருகின்ற சனிக்கிழமை இந்திய தரப்பில் லெப்டினல் ஜெனரல் ஹரிந்தர்சிங் தலைமையிலான குழு ஒன்று சீன உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவுடன் எல்லைப் பகுதியில் பேச்சுவார்தையில் ஈடுபட்டவுள்ளது.

எந்தெந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன என்பது தொடர்பில் அதிகாரபூர்வமாக தகவல் இல்லாததால் அமைதிக்காக குறிப்பிட்ட சில தவல்களை இந்தியா முன்வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி கடந்த ஒரு மாத காலமாக பதற்றம் அதிகரித்து காணப்படும் பாங்காங்கோ , கள்வான் பள்ளத்தாக்கு மற்றும் னெ்சோர்ச் ஆகிய பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கான திட்டங்கள் இந்திய தரப்பில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்க படுகின்றது.

கடந்த சில நாட்களாக இரு நாட்டு இராணுவத்திடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தையின் விளைவாக கள்வான் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த சீன இராணுவப்படைகள் சில நூறு அடிகள் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.