ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்க்கு கொரோனா தொற்று : அமெரிக்காவில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Subscribe our YouTube Channel

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.31 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸானது அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது . கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.42 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரத்தைத் கடந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.