சூரியனிடமிருந்து மின்சாரம் : வீட்டில் சோலார் பேனர்கள் மூலம் உற்பத்தி செய்வது எப்படி ?VIDEO

Subscribe our YouTube Channel

சூரியனிடமிருந்து வரும் ஒளி ஆற்றலை பயன்படுத்தி தான் சோலார் பேனல்கள் மின்சாரத்தை உருவாக்குகின்றன.ஒரு சிறந்த அணுக்கரு இணைவு நடக்கும் அணு உலை போன்றது.அதாவது சூரியனின் மையப்பகுதியில் தொடர்ந்து ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களை உருவாக்குவதால் அணுக்கரு இணைவு நிகழ்வின் போது மிக அதிகமான ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு சூரியனில் இருந்து வரும் ஒளியில் ஃபோட்டான்கள் இருக்கும். இவ்வாறு போட்டான்களை சோலார் பேனல்கள் ஒளிமின்னழுத்த விளைவு மூலம் மின்சாரமாக மாற்றுகின்றன. சூரிய ஒளியிலிருந்து வரும் ஒளியை சோலார் பேனல்கள் உறிஞ்சி அதை நேர் திசை மின்சாரம் (DC) மின்சாரமாக மாற்றுகிறது.

சோலார் பேனல்கள் பொதுவாக சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்படுகிறது.ஏனெனில் சிலிக்கான் அதிக அலைநீளத்தை உறிஞ்சி அதிக மின்சாரத்தை வழங்கும். இதனால் அவற்றை மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர்.நிற பேனல்கள் பாலிகிரிஸ்டலைன் (Palikiristalain) சிலிக்கான் கொண்டே அதன் முக்கிய ஒளிமின்னழுத்தம் தயாரிக்கப்படுகிறது.

சோலார் பேனல்களின் சற்று அடர்ந்த நீல நிறத்திற்கு காரணம் பேனலின் பிரதிபலிப்பை எதிர்க்கும் மேல் பூச்சு ஆகும்.இப்பூச்சு பேனலின் செயல்திறன் மற்றும் உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது. புட்டங்களை அதிகம் ஈர்ப்பதற்காக அடர்ந்த நீல நிறம் கொடுக்கப்படுகிறது.நீல நிற சோலார் பேனல்களை தயாரிக்க மூல பொருளான சிலிக்கானை உருக்கிபின் அச்சுகளில் ஊற்றிபி அதனை சதுர வடிவத்துக்கு கொண்டு வருவரப்படுகின்றன.

இந்த செயல்முறை சிலிக்கானை சரியாக அச்சில் சீரமைக்காது. இதன் விளைவாக அச்சுக்குள் பல தனிப்பட்ட சிலிக்கான் படிகங்கள் உருவாகும். இந்த தனிப்பட்ட சிலிக்கான் படிகங்களின் இயல்பு, பேனல்களுக்கு புள்ளிகள் நிறைந்த ஒளிரும் மற்றும் நீல நிறத்தை தருகின்றன.

கறுப்பு நிற சோலார் பேனல்களும் காணக்கிடைக்கின்றன.இவற்றை மோனோகிறிஸ்டல்லைன் என அழைக்கப்படுகிறது.கறுப்பு நிறம் மிக துல்லியமாக ஒளியை ஈர்க்கும் என்பதால் இவை அதிக செயல் திறன் கொண்டவையாக கருதப்படுகிறது. சிலிக்கான் படிகமாக அச்சிட பயன்படும் சிலிக்கான் மிக மிக தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இதில் இன்னொரு வகை சிலிக்கான் இல்லாமல் காட்மியம் டெல்லுரைடு (CdTe) கொண்டும் தயாரிக்கப்படுகிறது.இதிலுள்ள தனிமங்கள் அதிக கடிந்த தன்மை கொண்டவை ஆதலால் இவற்ற தயாரிப்பது மிகவும் கடினம்,இதனால் இவை மெல்லிய தகடாக காணப்படுகிறது.