‘என்னால் மூச்சுவிட முடியவில்லை அப்பா’கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனின் வீடியோ பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை.!வீடியோ இணைப்பு !!

Subscribe our YouTube Channel

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஒருவர், இறப்பதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 34 வயதான நபருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது.ஏறக்குறைய 10 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க அனுமதி மறுத்த பிறகு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். மகனின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு செல்போனை எடுத்த தந்தை அதிர்ச்சியடைந்தார். மகன் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவு செய்து தந்தைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மகன் கூறியிருப்பதாவது , ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் எவ்வளவு கெஞ்சி கேட்டும் மருத்துவர்கள் கடந்த 3 மணி நேரமாக ஆக்ஸிஜன் தரவில்லை. இனிமேல் என்னால் மூச்சுவிட முடியாது. என் இதயம் நின்று விடுவது போல் தோன்றுகிறது அப்பா’ என கூறியுள்ளார்.

இதனை பார்த்து தந்தை கண்கலங்கியுள்ளார். தற்போது தனது மகனின் இறப்புக்கு நீதி கேட்டு காவல்நிலையத்தை அணுகியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அவரது மறைவுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில்,அவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை அவருடன் தொடர்பில் இருந்த யாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.