குரங்கை தூக்கில் தொங்கவிட்டு , அதை நாய்களுக்கு இரையாக்கிய கொடூரன்.! பதை பதைக்கும் வீடியோ காட்சி.! VIDEO

Subscribe our YouTube Channel

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ் . இவரின் வீட்டிலுள்ள தொட்டியில் குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க முயற்சித்து தவறி தொட்டிக்குள் விழுந்துள்ளது.

குரங்கை காப்பாற்றாமல் அதனை பிடித்து மரத்தில் கட்டி தூக்கில் தொங்க விட்டுள்ளார். உயிருக்காக போராடிக்கொண்டிருந்த குரங்கை நாய்களும் கடித்துக் குதறின.இதனால் அந்த குரங்கு துடிதுடித்து இறந்தது.

இறந்த குரங்கை அந்த நாய்களுக்கே உணவாக வீசியுள்ளார் வெங்கடேஸ்வர ராவ். அப்போது அந்த பகுதியில் இருந்த மற்ற குரங்குகள் நாய்கள் இறந்த குரங்கை நெருங்காதவாறு பாதுகாத்துள்ளன.

இவ்வாறு செய்தால் இனிமேல் குரங்குகள் வீட்டில் வந்து தொல்லை தராது என பக்கத்து வீட்டுக்காரரின் அறியுரையின் பேரிலேயே இவ்வாறு செய்ததாக வெங்கடேஸ்வர ராவ் கூறினார். இந்த கொடூர சம்பவம் முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தள்த்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

வீடியோ வைரலனதை தொடர்ந்து அப்பகுதி போலீஸார் வெங்கடேஸ்வர ராவ் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.