இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம்.! பிரபல நடிகை மீது வழக்குப் பதிவு.!

Subscribe our YouTube Channel

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் திரையுலகினர் மட்டுமல்லாது, அவரது இரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் போலீசார் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

நடிகை ரியா சக்கரவர்த்தி ( Rhea Chakraborty ) கூறியதாவது, சுஷாந்துக்கு மன அழுத்தப் பிரச்னை இருந்தது. அவர் அதை வெளியில் சொன்னதே சொல்லவில்லை. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்.

பலமுறை அப்படி செய்திருக்கிறார். சில வேளை, கதவை பூட்டிக் கொண்டு பல மணிநேரமாக கதறி அழுவார்’ என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுஷாந்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாக, நடிகை ரியா மீது பீகாரில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பிரபல நடிகை மீது திடீர் வழக்குப் பதிவு!

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர், பீகார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை (24 ஆம்தேதி) விசாரணைக்கு வருகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை முடிவை எடுப்பதற்கு தூண்டியதாக, கரண் ஜோஹர், சல்மான்கான், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 பேர் மீது பீகார் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் பீகார் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.