அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற சீனாவின் உதவியை நாடினரா டிரம்ப் ..? சர்ச்சையை கிளப்பும் ‘தி ரூம் வேர் இட் ஹேப்பன்ட்’

Subscribe our YouTube Channel

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.இந்நிலையில் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற டொனால் டிரம்ப் , சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உதவியை நாடியுள்ளார் என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாள் தோறும் அதிகரிக்கும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. இந்த இடர்பாடுகளுக்கு மத்தியிலும் அதிபர் தேர்தலை அமெரிக்கா சந்திக்கவுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகளை ஒருபுறம் வைத்து விட்டு அமெரிக்க அரசியல்வாதிகள் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பே மீண்டும் போட்டியிடவுள்ளார். அமெரிக்காவின் பிரதான எதிர்கட்சியான ஜனநாயக்கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியில் பலம் குறையலாம் எனகருதப்படும் நிலையில், இதற்கு வலுசேர்க்கும் விதமாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுக்காப்பு செயலாளர் ஜான் போல்டன் எழுதியுள்ள புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அமைந்துள்ளன. ‘தி ரூம் வேர் இட் ஹேப்பன்ட்’என்ற பெயரில் சுமார் 577 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் வரும் 23 அன்று விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தகத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டில் அதிபர் ட்ரம் மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற்றதாகவும் அப்போது, நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற சீனா உதவ வேண்டும் என ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக அமெரிக்காவில் சீன விவசாயப் பொருட்களான சோயாபீன்ஸ் மற்றும் கோதுமை ஆகியவற்றின் கொள்முதலை ட்ரம்ப் அதிகரித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.