வீட்டின் பின் கிடைத்த பெறுமதியான உலோக பெட்டி..! தம்பதிகளின் வியக்கத்தகு செயல்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த தம்பதிகள்,தங்களது வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது துரு பிடித்த நிலையில் நான்கு உலோகத்தாலான பெட்டி இருப்பதைக் கண்டனர்.உள்ளே என்ன இருக்கிறது என திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதனுள் 52,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான தங்கம் மற்றும் காசும் இருந்துள்ளது.

இதனை தொடந்து அத்தம்பதிகள் அப்பெட்டியை உரியவரிடம் கொடுக்க முடிவு செய்தனர் . இதனால் அவர்கள் அப்பெட்டியை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்தனர்.இருப்பினும் 6 மாதங்களாகியும் இதுவரையிலும் அப்பெட்டியின் உரிமையாளர் கண்டுபிடிக்கப்படாததை தொடர்ந்து,

அப்பணமானது பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை மற்றும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் அப்பணத்தைப் வழங்கியுள்ளனர்.

மேலும் பல லட்சம் பெறுமதியான பணம் மற்றும் நகைகளை,தாங்களே அபகரிக்காமல் உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்று எண்ணிய அத்தம்பதிகளுக்கு பாராட்டப்பட்துக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.