பீட்டர் பாலுடன் நடந்த 3வது திருமணத்தை பதிவு செய்யப் போவதில்லை !! அதிரடியாக அறிவித்தார் வனிதா .! VIDEO

Subscribe our YouTube Channel

நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகள் வனிதா. இவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை கிறிஸ்டியன் முறைப்படி 3வதாக திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா ஊரடங்கின் காரணமாக வனிதாவின் 2 மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர் சிலரின் முன்னிலையில் அவரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் பீட்டர் பாலின் மனைவி தனக்கு முறைப்படி விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாகவும் , வனிதாவிடமிருந்து தனது கணவரை மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துள்ளதால் கிறிஸ்டியன் மதத்துக்கு மாற போவதில்லை. இத்திருமணத்தை பதிவு செய்யப் போவதில்லை எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் தனித்து வாழ்ந்து வந்த பீட்டர் பாலை தான் திருமணம் செய்துள்ளதாகவும்,யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.