மீண்டும் சிக்கலில் வனிதாவின் திருமண வாழ்க்கை.! 3வது கணவனின் மனைவி கொடுத்த புகாரால் பரபரப்பு.! VIDEO

Subscribe our YouTube Channel

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகள். இவர்களின் மூத்த மகள் வனிதா. விஜய் நடிப்பில் கதாநாயகனாக நடித்த‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். ஒரு சில படங்களில் நடித்த அவர், திரையுலகை விட்டு வெளியேறினார்.

இச்சூழலில் கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்திய ‘ பிக்பாஸ் ‘நிகழ்ச்சி மூலம் மீண்டும் தோன்றினார்.

வனிதாவின் 2 திருமண வாழ்கையும் தோல்வியுற்ற நிலையில் நேற்று பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் வனிதாவை திருமணம் செய்த பீட்டர் பால் மீது அவரது முன்னாள் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து ஹெலன் கொடுத்த புகாரில் , பீட்டருக்கும் எனக்கும் 20 ஆண்டுகளுக்கு முதலே திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக தனித்து வாழ்கிறோம். எனக்கு உரிய முறையில் விவாகரத்து தராமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார்.இப்போது உன்னால் முடிந்ததை பார் என மிரட்டுகிறார் என அவரது புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் பீட்டரை மீட்டுத் தருமாறு காவல்துறையினரிடம் எலிசபெத் கோரிக்கை விடுத்தார்.இதை தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.