வனிதாவின் 3வது திருமணம்.! வாழ்த்துக்களை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.! VIDEO

Subscribe our YouTube Channel

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகரில் ஒருவரான விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. இவர் 1995-ம் ஆண்டு விஜய் நடித்த ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007ல் விவாகரத்தும் பெற்றார். அதே ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 2010 முடிவுக்கு வந்தது.

முதல் திருமணத்தின் மூலமாக விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது திருமணத்தின் மூலம் ஜெயந்திகா என்ற மகள் இருக்கிறார். தற்போது இரண்டு மகள்களுடன் வனிதா விஜயகுமார் தனியாக வசித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் வனிதா விஜயகுமார் பிரபலமானார். அங்கும் சில சர்ச்சைகளில் சிக்கினார். இறுதியாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தன் மீதான அனைத்துச் சர்ச்சைகளையும் நீக்கினார். தற்போது youtupe சேனல் ஒன்றைத் தொடங்கி, தனது சமையல் வீடியோக்களைப் பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார். இன்று ஜூன் 27ம் திகதி அவரது வீட்டில் கிறிஸ்டியன் முறைப்படி நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.தற்போது வனிதா &பீட்டர் பால் க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது .