விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதில் புதிய சிக்கல் ? அதிர்ச்சியில் இந்திய அரசு !

Subscribe our YouTube Channelவிஜய்மல்லையை இந்தியாவிற்கு நாடுகடத்தப்படுவது தாமதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சுமார் பத்தாயிரம் கோடிரூபா வங்கிக்கடன் எய்ப்பு வழக்கில் சிக்கியுள்ள விஜய் மல்லையாவை நாடுகடத்தும் உத்தரவை லண்டன் உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உறுதி செய்தது .

அது மட்டுமன்றி அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து விட்டது. எனவே அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மேலும் சில சட்ட நடைமுறைகள் செயற்படுத்தப்படவிருக்கின்றது என்று பிரிட்டன் தூதரக செய்தி தொடர்பாடர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்விதமான நடைமுறைகள் எவ்வளவு நாட்களாகும் என்பதை அவர் வெளிப்பயைாக கூறவில்லை.

பிரிட்டன் சட்டப்படி ஒருவர் அகதியாக அடைக்கலம் கோரினால் அது தொடர்பாக முடிவு எடுக்கும் வரை அந்த நபரை நாடு கடத்த முடியாது. இருப்பினும் வஜய்மல்லையா அகதியாக அடைக்கலம் கோரனாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.