சாத்தான்குளம் சம்பவம் வீடியோ தொடர்பாக தன்னிடம் ₹2 கோடி பேரம் பேசினார்கள்.!பாடகி சுசித்ரா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

Subscribe our YouTube Channel

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்த இரட்டை மரணம் தொடர்பாக கண்டனங்கள், போராட்டங்கள் என நாட்டையே உலுக்கியது.இவ்வழக்கை சிபிசிஐடியினர் இரட்டை கொலை வழக்காக பதிவு செய்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் தனது twitter ல் பதிவிட்டிருந்தார் பாடகி சுசித்ரா.சுசித்ராவின் வீடியோ மற்றும் கருத்துகள் ஆங்கில ஊடங்களிலும் பேசப்பட்டது.

அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். சுசித்ராவின் ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார் சுசித்ரா. அதில், “கடந்த ஆட்சியிலும்(எதிர்கட்சி ஆட்சியில் இருந்தப் போது) இதேப் போன்று சம்பவம் நடந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும். அதற்காக 2 கோடி ரூபாய் வரை தனக்கு பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை“ என பதிவிட்டுள்ளார்.

அரசியல் பின்னணியில் இருந்த ஒருவரே சுசித்ராவிடம் பேரம் பேசியுள்ளார்.அந்த நபர் யார் என்பது குறித்து சுசித்ரா எந்த தகவலும் வெளியிடவில்லை.

சாத்தான்குளம் விவகாரம் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாடகி சுசித்ராவின் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.