Subscribe our YouTube Channel
1966ம் ஆண்டு ஜனவரி மாதம் ‘ஏர் இந்தியா 101’ விமானம் அப்போது பாம்பே என்று அழைக்கப்பட்ட மும்பையிலிருந்து லண்டன் சென்று கொண்டிருந்தபோது மோன் பிளாக்கில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.அந்த விமான லெபனான் தலைநகர் பீய்ரட் மற்றும் சுவிட்சர்லாந்தில் ஜெனிவாவில் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஜெனிவாவில் தரையிறங்கும்போது விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த 106 பயணிகள் மற்றும் 11 விமானப் பணியாளர்கள் உயிரிழந்திருந்தனர்.இச்செய்தி தாள், 117 பேரை பலிவாங்கிய விமான விபத்தின் மூலம் அங்கு வந்து சேர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.அந்த செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றிப் குறித்த செய்தி இடம் பிடித்துள்ளது.
அங்குள்ள உணவக உரிமையாளர் ஒருவரால் நேஷனல் ஹெரால்ட், எகனாமிக்ஸ் டைம்ஸ் உட்பட டஜன் கணக்கான செய்தித்தாள்கள் கண்டறியப்பட்டன.டிமோதி மோடின் என்னும் அந்த உணவக உரிமையாளர், அந்த “செய்தித்தாள்கள் உலர்ந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.
அந்த பனி மலையில் விமான விபத்தில் எஞ்சிய பொருட்களை அவர் சேகரித்து வருகிறார்.அதில் 2013ம் ஆண்டு விலை மதிக்கத்தக்கப் பல பொருட்கள் அவருக்கு கிடைத்தன. மரகதங்கள், மாணிக்கம் மற்றும் ரூபி கற்கள் அவருக்கு கிடைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.