தாயை இழந்த குருவிக் குஞ்சுகளை பாசத்துடன் பராமரிக்கும் நாய்.!இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி.!

Subscribe our YouTube Channel

குருவி குஞ்சுகளுடன் நட்புடன் பழகும் நாயின் வீடியோ சமூக வளைத்த தளங்களில் வைரலாகி வருகிறது.இங்கிலாந்தின் நார்க்கோர்ட் என்ற இடத்தில் ஜடேன் என்பவர் 5 வயதான ரூபி என்ற பெயர் கொண்ட நாயை வளர்த்து வருகிறார்.

அவரின் தோட்டத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்த குருவி இறந்து விட்டது.அதன் குஞ்சுகள் தாயின்றி பரிதவித்து வந்தன.குஞ்சுகள் மீது இரக்கம் கொண்ட ஜடேன் தனது வீட்டில் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் வளர்ப்பு நாயான ரூபியும் அக்குஞ்சுகளின் மேல் அதீத பாசத்துடன் அவைகளுடன் நட்புடன் பழகி வருகிறது.இவ்வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.