சமூக வலைத்தளங்களில் வைரலான சமந்தா யோகா செய்யும் புகைப்படம்.! ‘ஸ்பைடர் மேன்’ போல் வடிவமைத்த ரசிகர்கள்.!

Subscribe our YouTube Channel

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா.இவர் கடந்த வருடம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்கு பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில்,வீட்டில் இருந்தபடியே பொழுதை சிறந்த முறையில் கழித்து வருகிறார். விட்டுத் தோட்டம் செய்வது, நாய்குட்டி கூட விளையாடுவது,யோக செய்வது என பொழுதை கழித்துவரும் சமந்தா,

அவ்வப்போது தனது சில போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.அந்தவகையில் சமீபத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “தோட்டக்கலை தவிர .. யோகாவை நான் மிகவும் இரசிக்கிறேன், ஏனென்றால் என் கணவரும் நானும் சேர்ந்து ஒன்றாக யோகா செய்கிறோம் என கூறி பதிவிருந்தார்.

தற்போது சமந்தாவின் அந்த யோகா போட்டோவை ஸ்பைடர் மேன் போல் வடிவமைத்து “Spider-Man Fan From Home” என மீம் உருவாக்கியுள்ளனர் ரசிகர்கள். அதை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சமந்தா ” ”மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.