கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்த சாதனைத் தமிழர் கிருஷ்ணா எல்லா.!

Subscribe our YouTube Channel

உலக நாடுகளையே திணற வைத்து கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தீர்வு கிடைக்காத என அல்லாடிக் கொண்டிருக்கும் சூழலில்,இந்தியாவின் முதல் கண்டுபிடிப்பாக வெளியானது கோவேக்சின் மருந்து. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இந்த மருந்தை மனிதர்கள் மீது சோதனை நடத்த ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதனிடையே இந்த பாரத் பயோ டெக் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா எல்லா தமிழகத்தை சேர்ந்தவர்.இச்செய்தி தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்க கூடியதும் பெருமை படக்கூடியதுமாகும். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள நெமிலி என்ற கிராமத்தில்விவசாய குடும்பத்தில் பிறந்தவர் கிருஷ்ணா எல்லா.

இவர் அங்குள்ள அரசு பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ரோட்டரி திட்டத்தின் உதவியால் அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ளார்.படிப்பு முடித்து அங்கேயே தங்க தீர்மானித்தவரை அவரை தயார் தனது அன்புக் கட்டளையின் மூலம் மீண்டும் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த கிருஷ்ணா எல்லா, ஹைதராபாத்தில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 1995ல் மாசு இல்லாத தொழிற்பூங்காவை உருவாக்க திட்டமிட்ட சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு முதல் வடிவம் கொடுத்தது இவரின் பாரத் பயோ டெக் நிறுவனம்.

இங்கு இருந்து தான் ஜிகா வைரஸூக்கான மருந்தை கண்டுபிடித்துள்ளார். இந்த தடுப்பூசிக்கு 30 முதல் 40 டாலர்கள் வரை உலக நாடுகள் விலை நிர்ணயித்த போதிலும் ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு டாலருக்கு மருந்தை அறிமுகப்படுத்தியவர் இவர்.இந்த மலிவு விலை மருந்து பலரால் கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணா எல்லாவின் சாதனைகளை அங்கீகரித்து 100க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. உலகில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும்,’கோவாக்சின்’ எனும் தடுப்பூசி கண்டுபிடித்து,இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனம் எனும் சாதனையை படைத்துள்ளது அவரது நிறுவனம்.கோவேக்சின் இந்தியாவின் முதல் தடுப்பூசி என்ற பெருமையை பெற்றிருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.