நேருக்கு நேராக மோதியத்தில் ஏரியில் விழுந்த 2 விமானங்கள்.!அனைத்து பயணிகளும் பலி என அதிகாரிகள் அச்சம்.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவின் idaho மாகாணத்தில் உள்ள coeur d’Alene ஏரிக்கு மேலே வானில் பறந்து கொண்டிருந்த 2 விமானங்கள்,கடந்த ஞாயிற்றுக்கிழமை நேருக்குநேர் மோதி ஏரியினுள் விழுந்தன.இரண்டு விமானங்களில் சுமார் 8 பயணிகள் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது 2 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் விமானத்தில் இருந்த அனைவரும் இறந்திருக்க கூடும் என நம்புவதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.விபத்துக்குள்ளான விமானங்களில் ஒரு விமானமான cessna 206 ரகம் என தெரிய வந்துள்ள நிலையில்,மற்ற விமானம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இது குறித்து கூறிய அப்பகுதியில் படகு சவாரி செய்யும் நபர், இயந்திர வெடிப்பினால் இச்சம்பவம் நிகழ்ந்திருக்க கூடும்.சுமார் 200அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்,ஏரியில் விழுந்த போது இறக்கை தனியாக விழுந்தது.என கூறினார்.

விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்,காணாமல் போன பயணிகளை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.