சாத்தான்குளத்தில் பொலிஸாரால் மற்றொரு இளைஞருக்கு நிகழ்ந்த கொடூரம்.! என்ன நடக்கிறது சாத்தான்குளத்தில்.? VIDEO

Subscribe our YouTube Channel

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் இரட்டை மரணம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தன்குளம் அதே காவல்நிலையத்தில் மற்றோரு இளைஞரும் அதே காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பேய்க்குளம் பகுதியில் வசித்து வருபவர் வடிவம்மாள் .சாத்தன்குள காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் காவலர் அடங்கிய குழு தன்னுடைய மகன் உயிரையும் பறித்து விட்டதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த மே 18ம் திகதி வெங்கடேசபுரம் 6வது வார்டு உறுப்பினர் ஜெயகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார்.இதில் வடிவம்மாளின் முத்த மகன் துரையும் சம்பத்தப்பட்டதாக கூறி அவரைத்தேடி வந்தனர் காவல்துறையினர்.

அவர் கிடைக்காத நிலையில் அவரது தம்பி மகேந்திரனை அவரது பாட்டி வீட்டில் வைத்து மே 23ம் திகதி அன்று கைது செய்தனர்.அடுத்த நாள் துரை காவல் நிலையத்தில் சரணடைந்ததால் மகேந்திரன் விடுதலை செய்யப்பட்டார்.

வீட்டுக்கு வந்த மகேந்திரன் உடல் முழுதும் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ரகுகனேஷ் அடங்கிய பொலிஸ் குழுவினரால் தாக்கப்பட்டதாகவும்,இதனை வெளியில் சொன்னால் மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.

உடல்நலம் குன்றிய மகேந்திரனை தயார் வடிவம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.அவர் சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.காவல்துறையினரின் மிரட்டலால் பிரேத பரிசோதனை கூட செய்யப்படாமல் மகனின் உடலை தகனம் செய்து விட்டதாக தயார் வடிவம்மாள் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த துரை மற்றும் மகேந்திரன் மீது இது வரை எந்த ஒரு வழக்கும் கிடையாது என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.