அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 7வயது சிறுமி படுகொலை.! சம்பவத்துக்கு காரணமான கொடூரன் கைது.!

Subscribe our YouTube Channel

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அறந்தாங்கி ஏம்பல்கிராமத்தை சேர்ந்த சேர்ந்த 7 வயதுடைய சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மாயமாகியுள்ளார்.

இரவு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் உறவினர்கள் வீடுகள், பொது இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனால் சிறுமியை கடந்த 31ம் திகதி இரவு தொடக்கம் காணவில்லை என பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில்பொலிசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் அவர்களது வீட்டிற்கு அருகே ஊழலில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.இதையடுத்து, சிறுமியின் உடலைக் கைப்பற்றிய பொலிசார் பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்(29) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பொலிசார் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியைத் தானே பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து ராஜேஷை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.