பிரான்சின் துணை முதல்வராக ஈழத்து பெண் சேர்ஜியா மகேந்திரன் நியமனம்.!

Subscribe our YouTube Channel

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத்துப் பெண் சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பிரான்ஸ் சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையை சேர்ந்த செல்லப்பா மகேந்திரன்-தேவி தம்பதிகளின் மகளான இவர் நடந்து முடிந்த மாநகர சபை தேர்தலில் 2ம் சுற்றில் தெரிவாகிய benoit jimenez யோடு இணைத்து 50.84% வாக்குகளை பெற்று பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

பிரான்ஸ் 95ம் பிராந்தியத்தில்,மீண்டும் துணை முதல்வராகவும் பல முக்கிய உயர் பதவிகளையும் வகித்துள்ளார். சிறு வயது முதலே சமூக அக்கறையுள்ள இவர் மக்கள் நல பணிகளால் இவர் வாழும் கார்ஜ் லி கொனேஸ்(garge les Gonesse) மட்டுமல்லாது அயல் கிராமங்களான சார்செல்,டுனி போன்ற கிராமங்களில் வாழும் பலரும் பயனடைந்துள்ளனர்.

மேலும் மாநகர சபை தேர்தலில் ஆதிபரமேஸ்வரி சதாசிவம்(பாண்டிசேரி) மற்றும் கார்த்திக் சந்திரமூர்த்தி ஆகியோரும் மாநகர சபை உறுப்பினர்களாக தெரிவு செய்ய பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.