சாணி கரைசல் அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்ட இளைஞரின் பிறந்தநாள்.!வைரலாகும் வீடியோ!

Subscribe our YouTube Channel

கன்னியாகுமரியில் இளைஞர்கள் முட்டை,தயிர்,தக்காளி மற்றும் மாட்டு சாணிக்கரைசலுடன் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரம்பை எனும் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அப்பகுதியில் வசிக்கும் அவர்களது நண்பனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் இவருக்கு அவரது நண்பர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.முதலில் கேக் வெட்டி கொண்டாடிய அவர்கள் பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து தயிர்,தக்காளி மற்றும் சாணிக்கரைசல் ஆகியவற்றை தலையில் ஊற்றி அபிஷேகமும் செய்தனர்.

இதனை வீடியோவாக பதிவிட்ட அவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.இந்த வினிதமான பிறந்தநாள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர்கள் போதிய விழிப்புணர்வின்றி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.